சுடச்சுட

  

  வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி, சாலையோர வியாபாரிகள் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி செவ்வாய்க்கிழமை பேரணியாகச் சென்றனர். 
  புதுச்சேரி சாலையோர வியாபாரிகளை அப்புறப்படுத்தாமல் முறைப்படுத்த வேண்டும், சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரப் பாதுகாப்பு சட்டம் 
  2014-ஐ புதுச்சேரியில் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க முடிவு செய்திருந்தனர்.
  அதன்படி, செவ்வாய்க்கிழமை காலை சிஐடியு சங்க பொருளர் பிரபுராஜ் தலைமையில் இந்திராகாந்தி சிலை அருகே நூறுக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் திரண்டனர். தொடர்ந்து, பேரணியாகப் புறப்பட்டு, 
  100 அடி சாலை வழியாக வழுதாவூர் சாலையில் உள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு நுழைவாயில் அருகே சிஐடியு தலைவர் முருகன், செயலர் சீனுவாசன், துணைத் தலைவர் மதிவாணன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இதையடுத்து, சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் டி. அருணை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai