சுடச்சுட

  

  ஆகஸ்ட் 16 ஆம் தேதியை புதுவை குடியரசு தினமாக அறிவிக்க வலியுறுத்தி, பிரெஞ்சிந்திய மக்கள் உரிமைக் கட்சியினர் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை கருப்புப் பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தலைவர் டி. சிவராஜ் தலைமை வகித்தார்.
  இதில், ஆகஸ்ட் 16 ஆம் தேதியை புதுவை குடியரசு தினமாக அரசு அறிவிக்க வேண்டும், இதில் உள்ள தவறுகள் திருத்தப்பட வேண்டும், அன்றைய தினம் கீழுரில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் ஆளுநர் கிரண் பேடி கொடியேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
  இதில் அவைத் தலைவர் அங்கப்பன், துணைத் தலைவர் நடேசன், செயலாளர் சதாசிவம் உள்ளிட்ட பலர் சட்டையில் கருப்புப் பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai