சுடச்சுட

  

  பல்வேறு மாநில கலைஞர்கள் பங்கேற்கும் கலைவிழா புதுச்சேரியில் புதன்கிழமை (ஆக.14) தொடங்குகிறது.
  புதுவை அரசின் கலை பண்பாட்டுத் துறை,  தஞ்சைத் தென்னக பண்பாட்டு மையம் ஆகியவை இணைந்து, ஒவ்வொரு ஆண்டும்,  புதுச்சேரி கலை விழாவை நடத்தி வருகின்றன.  நிகழ் ஆண்டுக்கான,  புதுச்சேரி கலை விழா ஆக.14-இல் தொடங்கி ஆக.16-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு நடைபெறுகிறது.
  புதுச்சேரி  கடற்கரை காந்தி திடல், கன்னியக்கோயில் மன்னாதீஸ்வரர் பச்சைவாழியம்மன் கோயில் திடல், மணவெளி, உறுவையாறு,  கூடப்பாக்கம் மந்தைவெளித் திடல் ஆகிய 5 இடங்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கலை விழா தினமும் மாலை 6.30-க்கு தொடங்கி இரவு 9.30 மணி அளவில் நிறைவடைகிறது.
  அஸாம்,  ஒடிஸா, ஜார்க்கண்ட், ஹரியாணா, மத்திய பிரதேசம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், கேரளம், தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.  
  புதுச்சேரி கலை விழாவின் தொடக்க விழா புதன்கிழமை  மாலை கடற்கரை காந்தி திடலில் நடைபெறவுள்ளது. விழாவை  முதல்வர் நாராயணசாமி தொடக்கி வைக்கிறார். அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்,  புதுவை மக்களவைத் தொகுதி உறுப்பினர் வெ.வைத்திலிங்கம்,  எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai