சுடச்சுட

  

  மாவட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்

  By DIN  |   Published on : 14th August 2019 10:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி மாவட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
  ஆரம்பக் கல்வியை தொடர முடியாதவர்களும், பள்ளிப் படிப்பில் இடைநின்றவர்களும் புதுச்சேரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து இயங்கி வரும் தேசிய திறந்தவெளிப் பள்ளியில் சேர்ந்து எட்டாம் வகுப்புப் படித்து தேர்வு எழுதினர்.
  இதில், தேர்ச்சி பெற்ற 84 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி பயிற்சி நிறுவனத்தில் அண்மையில் நடைபெற்றது. லாசுப்பேட்டை காவல் ஆய்வாளர் டி. நாகராஜன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
  மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் நடனசபாபதி தலைமை வகித்து, கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன், தேர்ச்சி பெற்ற மாணவர்களை பத்தாம் வகுப்பு தொடர அறிவுரை வழங்கினார்.
  முன்னதாக, விரிவுரையாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். இதில் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திருநாராயணன் நன்றி 
  கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai