புதுச்சேரியில் நாளை மூத்த குடிமக்களுக்கான மருத்துவ முகாம்

மூத்த குடிமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் புதுச்சேரியில் வியாழக்கிழமை (ஆக.15) நடைபெறவுள்ளது.

மூத்த குடிமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் புதுச்சேரியில் வியாழக்கிழமை (ஆக.15) நடைபெறவுள்ளது.
 புதுவை மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்கம்,  ஆல்பா ஆர்த்தோ கிளினிக் ஆகியவை சார்பில்  புதுச்சேரி கம்பன் கலையரங்கம் அருகில் உள்ள ஆல்பா ஆர்த்தோ கிளினிக்கில்  இந்த மருத்துவ முகாம் காலை 9 முதல் பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. முகாமில், ஆர்த்தோ,  பொது மருத்துவம்,  நியூரோலஜி,  வலி நிவாரண மருத்துவம்,  சத்துணவு முறை பிரிவுகளின் டாக்டர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். எலும்பு பரிசோதனை, யூரிக் ஆசிட் டெஸ்ட், ரத்த சர்க்கரை அளவு,  ரத்த அழுத்த பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படுகின்றன.
முகாமில் மூத்த குடிமக்கள் குடும்பத்தினருடன் கலந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com