சுடச்சுட

  

  புதுவை பல்கலைக்கழகத்தின் தொழில் முனைவோர் துறை, ஏபிஎஸ்சிசி தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய பசுமை தொழில் யோசனைகள் போட்டி மற்றும் தொழில் பயிற்சி பயிலரங்கம் பல்கலைக்கழக வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
  பயிலரங்கை பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் தொடக்கி வைத்தார். தொடர்ந்து, காலநிலை அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இயக்குநர் ஸ்மிதா, பேராசிரியர் ஹன்னா ரேச்சல் வசந்தி, ஒருங்கிணைப்பாளர் நந்திவர்மன், பயிற்சியாளர் சித்திக், ஏபிஎஸ்சிசி இயக்குநர் கோல்டா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
  இந்தப் பயிற்சியில் புதுவைப் பல்கலைக்கழகம், ராஜீவ் காந்தி கால்நடை கல்லூரி, ஆச்சார்யா கல்லூரி, மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரிகளில் இருந்து 25 குழுக்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai