சுவிட்சர்லாந்தில் அக்.5-இல் சர்வதேச கம்பன் மாநாடு

அகில உலக கம்பன் கழகம் சார்பில், சர்வதேச கம்பன் மாநாடு சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் மாநிலக் கல்லூரியில் வரும் அக்டோபர் 5, 6-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

அகில உலக கம்பன் கழகம் சார்பில், சர்வதேச கம்பன் மாநாடு சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் மாநிலக் கல்லூரியில் வரும் அக்டோபர் 5, 6-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
இதுகுறித்து அகில உலக கம்பன் கழகத் தலைவர் த.சரஹண பவானந்தா புதுச்சேரியில் முதல்வர் வே.நாராயணசாமியை அண்மையில் சந்தித்து மாநாட்டுக்கான அழைப்பிதழை வழங்கி, வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அகில உலக கம்பன் கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழக தமிழியல் துறையுடன் இணைந்து நடத்தும் முதலாவது சர்வதேச கம்பன் மாநாடு சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சூரிச் மாநிலக் கல்லூரி கருத்தரங்க அரங்கில் வரும் அக்டோபர் 5, 6-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம், தனியுரை, நாட்டிய அரங்கம், சிறப்பாகச் செயல்படும் கம்பன் கழகங்களுக்கு விருது வழங்குதல், சிறந்த கம்பன் பணி செய்வோருக்கு விருது வழங்குதல், புத்தகம் வெளியீடு, மாநாட்டு மலர் வெளியீடு உள்ளிட்ட பல்வேறு இலக்கிய நிகழ்வுகள் நடைபெறும்.
5 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து செயல்படும் கம்பன் கழகங்களுக்கு பாராட்டு விருது வழங்கப்படும். எனவே, கம்பன் கழகங்கள் தங்களின் விவரக் குறிப்புகளை அனுப்பி வைக்க வேண்டும். 
இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், கம்பன் கழகப் பொறுப்பாளர்கள், தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், பேச்சாளர்களும், இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கம்போடியா, மோரீஷஸ், ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சேர்ந்த அறிஞர்களும் பங்கேற்க உள்ளனர்.
மாநாட்டுக்கு கம்பராமாயணம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வரவேற்கப்படுகின்றன. கட்டுரையாளர்கள், கட்டுரைகளை 3 பக்க அளவில் தயாரித்து, தங்களது புகைப்படம் மற்றும் சுய விவரக் குறிப்புகளுடன் i‌n‌t‌e‌r‌n​a‌t‌i‌o‌n​a‌l‌k​a‌m​b​a‌n@‌g‌m​a‌i‌l.​c‌o‌m​ என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 
தேர்ந்தெடுக்கப்படும் முதல் 3 கட்டுரைகளுக்கு பரிசுகளும், சமர்ப்பிக்கப்படும் அனைத்துக் கட்டுரைகளுக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும். இந்தக் கட்டுரைகள் தொகுப்பு புத்தகமாக வெளியிடப்படும். 
பின்னர், ஜெர்மனி, டச்சு, பிரெஞ்சு ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்த்து புத்தகங்களாக வெளியிடப்படும்.
மாநாடு தொடர்பான விவரங்களுக்கு இந்திய அலுவலக எண் 2, 7-ஆவது குறுக்குத் தெரு, ராஜராஜேஸ்வரி நகர், மடிப்பாக்கம், சென்னை - 600091 என்ற முகவரியும், செல்லிடப்பேசி எண் - 99400 40084, இணையதள முகவரி w‌w‌w.‌i‌n‌t‌e‌r‌n​a‌t‌i‌o‌n​a‌l‌k​a‌m​b​a‌n.​c‌o‌m ஆகியவற்றிலும் தொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com