புதுச்சேரியில் கடந்த 2 நாள்களில் 130 மி.மீ. மழை!
By DIN | Published On : 19th August 2019 09:56 AM | Last Updated : 19th August 2019 09:56 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை 60 மி.மீ. மழை பதிவானது. சனிக்கிழமை காலை முதல் சாரல் மழை பெய்தது. மீண்டும் இரவில் தொடங்கிய மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரை 70 மி.மீ. மழை பதிவானது. புதுச்சேரியில் கடந்த 2 நாள்களில் மட்டும் 130 மி.மீட்டர் மழை பதிவானது.
தொடர் மழையால் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி கடற்கரைச் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. இதனிடையே, புதுச்சேரியில் தொடர்ந்து மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.