Enable Javscript for better performance
கைதி இறந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப் படைகள்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கைதி இறந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப் படைகள்

    By DIN  |   Published On : 25th August 2019 01:20 AM  |   Last Updated : 25th August 2019 01:20 AM  |  அ+அ அ-  |  

    கைதி இறந்த வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப் படைகளை அமைத்து புதுவை டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீ வத்ஸவா சனிக்கிழமை உத்தரவிட்டார்.
    கடலூர் மாவட்டம், ரெட்டிச்சாவடி அருகேயுள்ள கரிக்கன் நகரைச் சேர்ந்தவர் ஜெயமூர்த்தி (22).  இவரை கடந்த 21.11.2018 அன்று மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் பாகூர் போலீஸார் பிடித்துச் சென்றனர். 
    சட்ட விரோத காவலில் சித்திரவதை செய்து, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். சிறையிலும் அவர் தாக்கப்பட்டதால் உடல்நிலை மோசமடைந்து 27.11.2018 அன்று அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார்.
    இதுகுறித்து நீதிபதி சரண்யா விசாரணை நடத்தி, தாக்கல் செய்த அறிக்கையின்படி,  அப்போதைய பாகூர் காவல் உதவி ஆய்வாளர் ஜெயகுருநாதன்,  காவல் உதவித் துணை ஆய்வாளர் திருமால்,  சிறைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன், சிறை மருத்துவர் வெங்கட ரமண நாயக் ஆகியோர் மீது சி.ஐ.டி. போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
    மேலும், இறந்தவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகள் சேர்க்கப்பட்டு வழக்கு, வன்கொடுமை தடுப்புப் பிரிவுக்கு (பி.சி.ஆர்.) மாற்றப்பட்டது.
    இந்த நிலையில், காவலர் புகார் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமெனக் கோரி, சிறைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.
    இந்த மனுவை கடந்த 7-ஆம் தேதி விசாரித்த உயர் நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்ததுடன், வழக்கின் புலன் விசாரணையை உத்தரவு கிடைத்த நாளில் இருந்து நான்கு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
    இதைத் தொடர்ந்து, டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீ வத்ஸவா இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் கைது செய்ய 5 தனிப் படைகளை அமைத்து உத்தரவு பிறப்பித்தார். 
    மேலும், அனைத்துக் காவல் நிலைய போலீஸாரும் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தங்கள் பகுதியில் இருப்பது தெரிய வந்தால்,  உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp