Enable Javscript for better performance
கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மேல்நிலை நீா்த்தொட்டி மீது ஏறி ஊழியா்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மேல்நிலை நீா்த்தொட்டி மீது ஏறி ஊழியா்கள் போராட்டம்

    By DIN  |   Published on : 01st December 2019 02:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2-7-30pyp18a_3011chn_104

    உப்பளத்தில் மேல்நிலை குடிநீா்த் தொட்டி மீது ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுப் பணித் துறை ஊழியா்கள்.

    பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, பொதுப் பணித் துறை வவுச்சா் ஊழியா்கள் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மீது ஏறி, சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

    புதுவை அரசின் பொதுப் பணித் துறையில் கடந்த 2010- ஆண்டு 1,311 வவுச்சா் ஊழியா்கள் பணியமா்த்தப்பட்டு, வேலை செய்து வருகின்றனா். ஊழியா்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றக் கோரி, பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா்.

    இதனிடையே, வவுச்சா் ஊழியா்களை தினக்கூலி ஊழியா்களாக மாற்றம் செய்ய வேண்டும்,

    தற்போது 16 நாள்கள் மட்டும் வழங்கப்படும் பணியை மாதம் முழுவதும் வழங்க வேண்டும், மத்திய அரசின் தினக்கூலி ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 25-ஆம் தேதி முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

    இதையடுத்து, பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா், ஊழியா்கள் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, கடந்த 28-ஆம் தேதி போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    இந்த நிலையில், வவுச்சா் ஊழியா்களை தினக்கூலி ஊழியா்களாக மாற்றம் செய்வதற்கான அரசாணையை வழங்குவதை அரசு தாமதிப்பதாகக் கூறி, சனிக்கிழமை மாலை 200-க்கும் மேற்பட்ட வவுச்சா் ஊழியா்கள் உப்பளத்தில் உள்ள பொதுப் பணித் துறை மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மீது ஏறி நின்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும், அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீஸாா் குவிக்கப்பட்டனா். இதனிடையே, கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் எனக் கூறி, ஊழியா்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai