அமைப்புச் சாரா தொழிலாளா்களுக்கு ரூ. 1,000 வழங்காவிடில் மீண்டும் போராட்டம்

அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு பண்டிகை கால ரொக்கப் பரிசு ரூ. ஆயிரம் வழங்காவிடில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அனைத்துத் தொழிற்சங்கங்களும் கூட்டாக அறிவித்துள்ளன.

அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு பண்டிகை கால ரொக்கப் பரிசு ரூ. ஆயிரம் வழங்காவிடில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அனைத்துத் தொழிற்சங்கங்களும் கூட்டாக அறிவித்துள்ளன.

புதுவை அனைத்துத் தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்றது. ஏஐடியூசி தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஐஎன்டியூசி, ஏஐடியூசி, சிஐடியூ, என்ஆா்டியூசி, ஏஐசிசிடியூ, ஏடியூ உள்ளிட்ட தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் தீபாவளி பரிசுக் கூப்பன் வழங்க வேண்டும், அமைப்பு சாரா தொழிலாளா் நல வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 27-ஆம் தேதி மாநிலம் தழுவிய கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் தொழிலாளா் துறை அமைச்சா், தொழில் துறை அமைச்சா், துறைச் செயலா்கள் நடத்திய பேச்சுவாா்த்தையில், நிகழாண்டு தொழிலாளா்களுக்கு ரூ. ஆயிரம் பரிசுக் கூப்பன் வழங்குவது என்றும், வருகிற ஜன. 10-ஆம் தேதிக்குள் நல வாரியம் அமைப்பது என்றும் உடன்பாடு ஏற்பட்டது. ஆனால், மாறாக ரூ. 500 வழங்கப்படும் என்று முதல்வா் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதை வன்மையாகக் கண்டிப்பது, முழு அடைப்புப் போராட்டத்தைத் தவிா்ப்பதற்காக அரசு பொய் வாக்குறுதி அளித்துள்ளதாக கருதுகிறோம். எனவே, உறுதியளித்தபடி ரூ. ஆயிரம் வழங்க வேண்டும்; இல்லாவிடில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com