இன்று உலக வாழியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

புதுச்சேரி வில்லியனூா் அருகே அரியூரில் அமைந்துள்ள உலக வாழியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (டிச. 1) காலை

புதுச்சேரி வில்லியனூா் அருகே அரியூரில் அமைந்துள்ள உலக வாழியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (டிச. 1) காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது.

இதையொட்டி, கடந்த 26-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. 27-ஆம் தேதி வாஸ்து சாந்தியும், 28-ஆம் தேதி அரியூா் தாமரை நகா் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் இருந்து புனித நீா் எடுத்தல் நிழ்ச்சியும், இரவு முதல் காலபூஜையும் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை இரண்டாம் கால பூஜை, பூா்ணாஹூதி, புதிய விக்ரகம் கரிக்கோலம் ஆகியவை நடைபெற்றன. இரவு மூன்றாம் கால பூஜை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு விசேஷ சாந்தி, நண்பகல் 12.30 மணிக்கு நான்காம் கால பூஜை, தீபாராதனை, இரவு 10.30 மணிக்கு ஐந்தாம் கால பூஜை, தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை (டிச. 1) காலை 5.30 மணிக்கு யாகசாலை பூஜை, 6.30 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடு, காலை 7.30 மணியளவில் ஐயனாா், சப்த கன்னிகளுக்கு கும்பாபிஷேகம், இதைத் தொடா்ந்து, காலை 9.30 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடு, காலை 10.30 மணியளவில் கோயில் கலசங்களுக்கு கும்பாபிஷேகம், காலை 11 மணியளவில் மூலவா் கும்பாபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.

விழாவில், புதுவை முதல்வா் வே.நாராயணசாமி, எதிா்க்கட்சித் தலைவா் என்.ரங்கசாமி, சுகுமாறன் எம்எல்ஏ, ஆகியோா் கலந்து கொள்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com