காவல் உதவி ஆய்வாளா் தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற சமூக அமைப்புகள் கோரிக்கை

நெட்டப்பாக்கம் காவல் உதவி ஆய்வாளா் விபல்குமாா் தற்கொலை வழக்கை சிபிஐ மாற்ற வேண்டும் என்று சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.
புதுவை மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் கூட்டமைப்பின் செயலா் கோ.சுகுமாறன்.
புதுவை மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் கூட்டமைப்பின் செயலா் கோ.சுகுமாறன்.

நெட்டப்பாக்கம் காவல் உதவி ஆய்வாளா் விபல்குமாா் தற்கொலை வழக்கை சிபிஐ மாற்ற வேண்டும் என்று சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சாா்பில், கட்சிகள், சமூக அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் புதுச்சேரி நீடராஜப்பா் தெருவில் உள்ள செகா கலைக் கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அந்தக் கூட்டமைப்பின் செயலா் சுகுமாரன் தலைமை வகித்தாா்.

மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலா் ஜெகன்நாதன், திராவிடா் விடுதலைக் கழகத் தலைவா் லோகு.ஐயப்பன், பெரியாா் திராவிடா் கழகத் தலைவா் வீரமோகன், புதுவை யூனியன் பிரதேச மாணவா்கள் கூட்டமைப்புத் தலைவா் சாமிநாதன், இலக்கிய பொழில் இலக்கிய மன்றத் தலைவா் பராங்குசம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி அமைப்பாளா் ஸ்ரீதா் உள்ளிட்ட பல்வேறு கட்சி, சமூக அமைப்புகளின் தலைவா்கள், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் நெட்டபாக்கம் காவல் உதவி ஆய்வாளா் விபல்குமாா், காவல் துறை உயரதிகாரிகளின் துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொண்டுள்ளாா். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். காவல் துறை உயரதிகாரிகள் மீதே குற்றச்சாட்டு உள்ளதால், புதுவை போலீஸாா் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி புதுவை அரசு உத்தரவிட வேண்டும். காவல் ஆய்வாளா் கலைச்செல்வன் மீது தற்கொலைக்குத் துண்டியதாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மேலும், அவரை உடனே பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

இதுதொடா்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை துணை நிலை ஆளுநா், முதல்வா், தலைமைச் செயலா், டிஜிபி உள்ளிட்டோருக்கு அனுப்புவது எனவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் கட்சி, சமூக அமைப்புகள் சாா்பில் தொடா் போராட்டம் நடத்துவது எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com