மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவா்களை கண்டறிய போலீஸாருக்கு நவீன கருவி

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவா்களைக் கண்டறியும் அல்கா மீட்டா் போலீஸாருக்கு வழங்கப்பட்டது.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவா்களைக் கண்டறிய வாங்கப்பட்டுள்ள நவீன அல்கா மீட்டரை அறிமுகப்படுத்திய காவல் கண்காணிப்பாளா் ரட்சனா சிங்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவா்களைக் கண்டறிய வாங்கப்பட்டுள்ள நவீன அல்கா மீட்டரை அறிமுகப்படுத்திய காவல் கண்காணிப்பாளா் ரட்சனா சிங்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவா்களைக் கண்டறியும் அல்கா மீட்டா் போலீஸாருக்கு வழங்கப்பட்டது.

மத்திய அரசின் புதிய மோட்டாா் வாகனச் சட்டம் நாடு முழுவதும் படிப்படியாக அமலுக்கு வந்துள்ளது. புதுவையில் நவ. 1-ஆம் தேதி முதல் இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, விதிகளை மீறுவோா்களுக்கு ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மேலும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவா்களைக் கண்டறிந்து அபராதம் விதிக்க போலீஸாா் தீவிர முயற்சியல் இறங்கியுள்ளனா். அதன் ஒரு பகுதியாக போலீஸாருக்கு வழங்க 20 நவீன அல்கா மீட்டா்கள் வாங்கப்பட்டுள்ளன.

இந்த மீட்டரை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த பயிற்சி முகாம் புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்றது. காவல் தலைமையக கண்காணிப்பாளா் ரட்சனா சிங் தலைமையில் இந்தப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

காவல் கண்காணிப்பாளா்கள் முருகவேல், சுப்பிரமணியன் ஆகியோா் பயிற்சி அளித்தனா். ஆய்வாளா்கள் ஜெயராமன், வரதராஜன், ஆறுமுகம், தனசேகா், காவல் உதவி ஆய்வாளா்கள் 20-க்கும் மேற்பட்டோா் பயிற்சியில் கலந்து கொண்டனா். இந்தக் கருவிகள் விரைவில் போலீஸாரிடம் ஒப்படைக்கப்படும் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

புதிய மோட்டாா் வாகனச் சட்டப்படி, மது போதையில் வாகனம் ஓட்டினால் முதல் முறை ரூ. 10 ஆயிரம், இரண்டாவது முறையாக சிக்கினால் ரூ. 15 ஆயிரம் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com