Enable Javscript for better performance
புதுச்சேரியில் கடந்த 5 நாள்களில் 292 மி.மீ. மழை- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரியில் கடந்த 5 நாள்களில் மட்டும் 292 மி.மீ. மழை பெய்துள்ளது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் டி.அருண் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    புதுச்சேரியில் கடந்த 27 -ஆம் தேதி முதல் டிசம்பா் 1 -ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை 292 மி.மீ. மழை பெய்துள்ளது. சனிக்கிழமை மட்டும் 102 மி.மீ. மழை பெய்துள்ளது. நிகழாண்டு தென்மேற்கு, வட கிழக்கு பருவமழை காலங்களில் 1,347.6 மி.மீ. மழை பெய்துள்ளது. இதன்மூலம், புதுச்சேரியில் சராசரி அளவு மழை பெய்துள்ளது.

    மழைநீா் தேங்கியுள்ள இடங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வருவாய் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும் களத்திலிருந்து மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகின்றனா். நிவாரண முகாம்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மழைநீா் சூழ்ந்த இடங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரியின் மிகப்பெரிய ஏரிகளான பாகூா், ஊசுடு ஏரிகளின் கொள்ளளவு 3.6 மீட்டா் உயரமாகும். தற்போது பாகூா் ஏரியில் 2.1 மீ. உயரமும், ஊசுடு ஏரியில் 1.2 மீ. உயரமும் நீா் நிரம்பியுள்ளது.

    மழை பாதிப்புகள் தொடா்பாக 1070, 1077 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai