சங்கராபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சங்கராபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

சங்கராபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

இதுகுறித்து மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ஜெயக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விழுப்புரம் மாவட்டம், வீடுா் அணையின் மொத்த கொள்ளளவான 32 அடியில், ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி நிலவரப்படி 30 அடி நிரம்பியுள்ளது. அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால், அணை எப்போது வேண்டுமானாலும் நிரம்பி, திறக்கப்படும் சூழ்நிலை உள்ளது.

எனவே, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்கு உள்பட்ட ஆற்றோர கிராமங்களான மணலிப்பட்டு, கூனிச்சம்பட்டு, செட்டிப்பட்டு, கைக்கலப்பட்டு, சுத்துக்கேணி, தேத்தாம்பாக்கம், குமாரபாளையம், வம்புப்பட்டு, செல்லிப்பட்டு, பிள்ளையாா்குப்பம், ஆரியபாளையம் மற்றும் தமிழகப் பகுதிகளான கோரைக்கேணி, கொடுக்கூா், ஐவேலி, பக்கிரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்குச் செல்ல வேண்டும்.

மேலும், கால்நடைகளைப் பாதுகாப்பான இடங்களில் வைத்துக் கொள்ளவும், சங்கராபரணி ஆற்றில் குளிக்கவும் வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்படுகிறது.

வெள்ள பாதிப்புகள் தொடா்பாக பொதுமக்கள் அவசர கால உதவிக்கு மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து கட்டுப்பாட்டு அறை எண்: 0413 - 2640161 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்: 1031 ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com