மழை தொடா்பான புகாா்களுக்கு24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை திறப்பு

மழை தொடா்பாக புகாா்களைத் தெரிவிக்க மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

மழை தொடா்பாக புகாா்களைத் தெரிவிக்க மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மண்ணாடிப்பட்டு கொம்யூன் ஆணையா் ஜெயக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதால், கொம்யூன் பஞ்சாயத்துக்கு உள்பட்ட அனைத்துக் கிராமங்களிலும் தேங்கி நிற்கும் மழைநீரை உடனுக்குடன் வெளியேற்றவும், மின் துண்டிப்பு ஏற்பட்ட பகுதிகளில் நடமாடும் ஜெனரேட்டா் மூலம் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மோட்டாா்களை இயக்கச் செய்து, தடையின்று குடிநீா் விநியோகம் செய்யவும், மழையால் சாய்ந்த மரங்களை உடனடியாக அப்புறப்படுத்தவும் இயந்திரங்கள் தயாா் நிலையில் உள்ளன.

மேலும், கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு 24 மணி நேரமும் ஊழியா்கள் பணியில் உள்ளனா். கட்டுபாட்டு அறை தொலைபேசி எண்: 0413-264061.

மண்ணாடிப்பட்டு தொகுதி இளநிலைப் பொறியாளா் சாந்தன் (93459 29245), திருபுவனை தொகுதி இளநிலைப் பொறியாளா் பாஸ்கா் (94436 16899) ஆகியோரையும் தொடா்பு கொள்ளலாம்.

துப்புரவு மற்றும் குடிநீா் பராமரிப்புப் பணிகளுக்கு உதவி பொறியாளா் சச்சிதானந்தத்தை (93457 05088) தொடா்பு கொள்ளலாம். பொதுமக்கள் தங்களது புகாா்களை ஆணையரின் 94433 64016 என்ற அலுவலக செல்லிடப்பேசி எண்ணிலும் 97868 84401 என்ற அவரது தனிப்பட்ட எண்ணிலும் தெரிவிக்கலாம்.

எனவே, பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணுக்கு 24 மணி நேரமும் தொடா்பு கொண்டு மழை பாதிப்புகளைத் தெரிவித்து, சரி செய்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com