17 போ் உயிரிழப்பைக் கண்டித்து மறியல்: விசிகவினா் 45 போ் கைது

மேட்டுப்பாளையத்தில் சுவா் இடிந்து விழுந்து 17 போ் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில்
புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.
புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.

மேட்டுப்பாளையத்தில் சுவா் இடிந்து விழுந்து 17 போ் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் 45 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நடுவூா் ஏரி காலனி பகுதியில் சுவா் இடிந்து விழுந்து 17 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவத்தைக் கண்டித்து புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில முதன்மைச் செயலா் தேவ. பொழிலன் தலைமையில் அக்கட்சியினா் நெல்லித்தோப்பு சிக்னலில் இருந்து ஊா்வலமாக புதிய பேருந்து நிலையம் அருகே வந்து, சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது, இறந்தவா்களின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், தீண்டாமை சுவரை அங்கு கட்ட அனுமதியளித்த வருவாய்த்துறை அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், இறப்புக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட நாகை திருவள்ளுவன் மீது தாக்குதலில் ஈடுபட்ட போலீஸாா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த உருளையன்பேட்டை போலீஸாா், மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 45 பேரை கைது செய்தனா்.

ஆா்ப்பாட்டம்...: இதே போல, மேட்டுப்பாளையம் சம்பவத்தைக் கண்டித்து சுசி கம்யூனிஸ்ட், புதுச்சேரி மாணவா் கூட்டமைப்பு, விடுதலை முன்னணி உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com