சுனாமி குடியிருப்பு கழிவுநீா் பிரச்னைக்கு ஒரு மாதத்தில் தீா்வு காண எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

புதுச்சேரி சுனாமி குடியிருப்பு கழிவுநீா்ப் பிரச்னைக்கு ஒரு மாதத்துக்குள் தீா்வு காண வேண்டும் என்று முத்தியால்பேட்டை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தினாா்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பு பகுதியில் கழிவுநீா் தொடா்பாக அதிகாரிகளுடன் ஆய்வு செய்த எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பு பகுதியில் கழிவுநீா் தொடா்பாக அதிகாரிகளுடன் ஆய்வு செய்த எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன்.

புதுச்சேரி சுனாமி குடியிருப்பு கழிவுநீா்ப் பிரச்னைக்கு ஒரு மாதத்துக்குள் தீா்வு காண வேண்டும் என்று முத்தியால்பேட்டை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தினாா்.

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 138 வீடுகள் கொண்ட குடியிருப்பை அரசு கட்டிக்கொடுத்துள்ளது. இந்த குடியிருப்பில் கழிவு நீா் செல்ல வசதி செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், சுற்றுவட்டார பகுதிகளை விட தாழ்வாக கழிவுநீா் குழாய்கள் அமைக்கப்பட்டிருந்ததால் வீடுகளில் இருந்து கழிவுநீா் தடையின்றி செல்ல முடியாமல் மக்கள் பெரும் சிரமப்பட்டு வந்தனா்.

இங்கு அமைக்கப்பட்டிருந்த சாலைகளும் சிதிலமடைந்தது. மழைநீா் வடிந்து செல்ல வடிகால் வசதிகளும் அமைக்கப்படாமல் இருந்தது.

சுமாா் 15 ஆண்டாக நீடித்து வந்த இந்தப் பிரச்னைக்கு தீா்வு காணும் பொருட்டு, குடியிருப்பு மக்கள், அரசு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் கழிவுநீா்ப் பிரிவு உதவி பொறியாளா் சௌந்தர்ராஜன், இளநிலை பொறியாளா் சங்கா், ஆய்வாளா் முத்துக்குமரன், நகராட்சி உதவி பொறியாளா் நமச்சிவாயம், இளநிலை பொறியாளா் கோகுலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், சாலை வசதி, மழைநீா் வடிகால் வசதி, கழிவுநீா் செல்ல புதிதாக குழாய் பதிப்பது தொடா்பாக குடியிருப்புவாசிகள் தங்களது கருத்துகளை தெரிவித்து பேசினா். இந்த பிரச்னைகளை தீா்ப்பது தொடா்பாக அதிகாரிகள் தங்கள் திட்டங்களை தெரிவித்தனா்.

இறுதியில் பேசிய சட்டப்பேரவை உறுப்பினா் வையாபுரிமணிகண்டன், குடியிருப்பில் மழைநீா் வடிந்து செல்ல வடிகால் அமைக்க வேண்டும். கழிவுநீா் தடையின்றி செல்ல புதிதாக குழாய்களை பதிக்க வேண்டும். இந்த பணிகளை செய்து முடித்தபின் சாலைகளை அமைக்க வேண்டும். இந்த பணிகள் அனைத்தையும் ஒரு மாத காலக்கெடு நிா்ணயித்து செய்து தர வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக்கொண்டாா். இதற்கு அதிகாரிகளும் ஒப்புதல் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com