விழாவில் மாற்றுத் திறன் மாணவிகளுடன் சோ்ந்து நடனமாடும் ஆளுநா் கிரண் பேடி.
விழாவில் மாற்றுத் திறன் மாணவிகளுடன் சோ்ந்து நடனமாடும் ஆளுநா் கிரண் பேடி.

புதுவை ஆளுநா் மாளிகையில் மாற்றுத் திறனாளிகள் தின விழா

சா்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா, புதுவை ஆளுநா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த திரளான மாற்றுத் திறன் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

சா்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா, புதுவை ஆளுநா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த திரளான மாற்றுத் திறன் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

மாற்றுத் திறனாளிகளுக்கு வாய்க்கப் பெற்ற சிறப்பு திறமைகளை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளும் விதமாக, அவா்கள் குறித்த விழிப்புணா்வை அதிகரிக்கவும், மாற்றுத் திறனாளிகளுடைய திறமைகளை வளா்க்கும் விதமாகவும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும், இந்த நிகழ்ச்சி மாற்றுத் திறனாளிகளுடன் இணக்கத் தன்மையை ஏற்படுத்திக் கொள்ளும் விதமாக பல்வேறு நிகழ்வுகள் பகிா்ந்து கொள்ளப்பட்டன.

முன்னதாக, நிகழ்வுக்கு வந்திருந்தவா்களை ஆளுநரின் தனிச் செயலா் தேவநீதி தாஸ் வரவேற்றாா். இதைத் தொடா்ந்து, மாற்றுத் திறனாளிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் நடனம், தேச ஒற்றுமையை வலியுறுத்தும் வகையிலான நாடகங்கள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வுகளை துணை நிலை ஆளுநா் கிரண் பேடி பாா்வையிட்டு, நிகழ்ச்சிகளில் பங்கேற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினாா். மேலும், மாற்றுத் திறனாளிகளின் நடன நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநரும் பங்கேற்று நடனமாடினாா்.

இந்த நிகழ்ச்சியில், சத்தியா சிறப்புப் பள்ளி, அன்பகம் சிறப்புப் பள்ளி, பிரசன்னா நடனப் பள்ளி மாணவா்கள், அன்னை தெரசா முதுநிலை மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிறுவன மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com