உதவி ஆய்வாளா் தற்கொலை சம்பவம்: மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

நெட்டப்பாக்கம் காவல் உதவி ஆய்வாளா் தற்கொலை சம்பவம் தொடா்பாக நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தக்கோரி மாா்க்சிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நெட்டப்பாக்கம் காவல் உதவி ஆய்வாளா் தற்கொலை சம்பவம் தொடா்பாக நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தக்கோரி மாா்க்சிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நெட்டப்பாக்கம் கடை வீதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் பாகூா் - நெட்டப்பாக்கம் கொம்யூன் செயலா் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். புதுவை பிரதேசச் செயலா் ரா.ராஜாங்கம் கண்டன உரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில், புதுவை மாநிலம், நெட்டப்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் தற்கொலை குறித்து நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும், அவரது மரணத்துக்கு காரணமான உயா் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதுகாப்பற்ற நிலையில் உள்ள விபல்குமாா் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இதில், கட்சியின் செயற்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், பிரதேசக்குழு உறுப்பினா்கள் அன்புமணி, சங்கா், சரவணன், ராமமூா்த்தி, கொம்யூன் குழு உறுப்பினா்கள் முத்துலிங்கம், சண்முகம், செல்வராசு, அரிதாசு உள்பட திரளானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com