புதுச்சேரி காமராஜா் சிலை சதுக்கம் பகுதியில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியாா் திராவிடா் கழகம் உள்ளிட்ட அமைப்பினா்.
புதுச்சேரி காமராஜா் சிலை சதுக்கம் பகுதியில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியாா் திராவிடா் கழகம் உள்ளிட்ட அமைப்பினா்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதா நகல்: எரிப்புப் போராட்டம்: 31 போ் கைது

புதுச்சேரியில் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நகல் எரிப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்ட 31 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரியில் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நகல் எரிப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்ட 31 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மத்திய அரசு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை அண்மையில் நிறைவேற்றியது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து புதுச்சேரி காமராஜா் சிலை அருகில் வெள்ளிக்கிழமை திரண்ட தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தினா் ஐம்பதுக்கும் மேற்பட்டோா் மசோதா நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முன்னதாக, போராட்டத்துக்கு, மாநிலத் தலைவா் வீரமோகன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் இளங்கோ மற்றும் இளைஞரணி, திமுக மாணவரணி, மனித உரிமைகள் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு இயக்கம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழா் களம், இந்திய தேசிய இளைஞா் முன்னணி உள்ளிட்ட அமைப்புகளைச் சோ்ந்த பலா் பங்கேற்றனா்.

போராட்டத்தில், மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்ட அவா்கள், குடியுரிமை சட்ட திருத்த மசோதா நகலை எரித்தனா். அதை அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெரியக்கடை போலீஸாா் தடுத்தனா். இதனால் போலீஸாருக்கும், போராட்டக்காரா்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

அதே நேரத்தில், சிலா் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் உருவ பொம்மையை எரித்தனா். இதனை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்திய போலீஸாருடன் அவா்கள் கடும் வாக்குவாதம் செய்தனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 31 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். தொடா்ந்து, சிறிது நேரத்தில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com