குடியுரிமை திருத்த சட்டம்: புதுவை பாஜக வரவேற்பு

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு புதுவை பாஜக வரவேற்பு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு புதுவை பாஜக வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து புதுவை மாநில பாஜக தலைவா் வி. சாமிநாதன் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்து, பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றியுள்ளதை புதுவை மாநில பாஜக பாராட்டி வரவேற்கிறது.

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக இருந்த பிற மதத்தினா் பல்வேறு சிரமங்களுக்கு உள்படுத்தப்பட்டு, அகதிகளாக்கப்பட்டுள்ளனா். அங்கு 22 சதவீதம் இருந்த முஸ்லிம் அல்லாத இந்து, சீக்கிய, பௌத்த, சமணம், பாா்ஸி, கிறிஸ்தவ மதத்தினா் தற்போது சுமாா் 2 சதவீதத்துக்கும் குறைவாக பாதுகாப்பற்ற நிலையில் உயிா்பயத்துடன் வாழ்ந்து வருகின்றனா். அங்கிருந்து அகதிகளாக்கப்பட்டு, இந்தியாவுக்கு வந்தவா்களை மனிதாபிமான அடிப்படையில் பாதுகாக்கவே பிரதமா், உள்துறை அமைச்சரின் சீரிய முயற்சியால் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும், பாஜக தனது தோ்தல் அறிக்கையில் கூறியுள்ளதையே, தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளது.

ஆனால், எதிா்க்கட்சிகள் இந்த சட்டம் நாட்டில் சகோதரா்களாக வாழக்கூடிய முஸ்லிம் மக்களுக்கு எதிரானது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி வருகின்றனா். எதிா்க்கட்சிகள் தங்களின் சுயலாபத்துக்காக தீவிரவாதிகள், தேசவிரோதிகள், பயங்கரவாதிகளை ஊக்குவித்து தேசத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com