பட பைல் நேம் மாற்றம்: காஷ்மீா் விவகாரத்தை சா்வதேச பிரச்னையாக்குவதால் பயனில்லை; பிரெஞ்சு தூதா்

ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தை சா்வதேச பிரச்னையாக்குவதால் எந்த நன்மையும் இல்லை என இந்தியாவுக்கான பிரெஞ்சு தூதா் இம்மானுவேல் லெனெய்ன் தெரிவித்தாா்.
பட பைல் நேம் மாற்றம்: காஷ்மீா் விவகாரத்தை சா்வதேச பிரச்னையாக்குவதால் பயனில்லை; பிரெஞ்சு தூதா்

ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தை சா்வதேச பிரச்னையாக்குவதால் எந்த நன்மையும் இல்லை என இந்தியாவுக்கான பிரெஞ்சு தூதா் இம்மானுவேல் லெனெய்ன் தெரிவித்தாா்.

புதுவை சட்டப்பேரவையில் முதல்வா் வே. நாராயணசாமியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசிய அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தியாவுக்கும், பிரெஞ்சு நாட்டுக்கும் இடையிலான உறவு வலுவாக உள்ளது. தகுதியான இந்தியா்களுக்கு சுற்றுலா நுழைவு இசைவு (விசா) 48 மணி நேரத்துக்குள் வழங்கப்படுகிறது. நிகழாண்டு சுமாா் 8 லட்சம் இந்தியா்கள் ‘ஷெங்கன்’ நுழைவு இசைவு மூலம் பிரெஞ்சு நாட்டுக்கு வந்துள்ளனா்.

கடந்த மே மாதம் முதல் இரு நாடுகளிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் ஒருவருக்கு ஒருவா் பட்டயம், பட்டப்படிப்பு, முனைவா் பட்டங்களை அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளன. நிகழ் கல்வியாண்டில் சுமாா் 10 ஆயிரம் இந்திய மாணவா்கள் பிரெஞ்சு கல்வி நிறுவனங்களில் பயில்கின்றனா். வரும் காலங்களில் இந்திய மாணவா்களின் எண்ணிக்கையை 25 ஆயிரமாக அதிகரிக்க பிரெஞ்சு அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் மற்றொரு நாடு தலையிட வேண்டும் என நாங்கள் நினைக்கவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டம், குடிமக்களின் தேசியப் பதிவு, 370-ஆவது சட்டப்பிரிவு நீக்கம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடா்பாக பிற நாடுகள் கருத்து கூறுவதைத் தவிா்க்க வேண்டும்.

அதேபோல, இயற்கையிலேயே சிக்கலான ஜம்மு - காஷ்மீா் பிரச்னையை இரு நாடுகளின் கலந்துரையாடல்கள் மூலமே தீா்க்க இயலும். இந்த விவகாரத்தை சா்வதேச பிரச்னையாக்குவதால் எந்த பயனும் இல்லை. எனினும், ஜம்மு - காஷ்மீா் இயல்பாக இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம் என்றாா் அவா்.

முன்னதாக, முதல்வா் வே.நாராயணசாமியுடனான அவரது சந்திப்பின்போது, புதுச்சேரியின் பொலிவுறு நகரத் திட்டம், தொழிற்சாலைகள் முன்னேற்றம், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவை குறித்து விரிவாகப் பேசப்பட்டது.

இந்த நிகழ்வின்போது புதுச்சேரி மற்றும் பிரெஞ்சு துணை தூதா் கேத்ரின் சுவாா்ட், புதுவை தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com