பழவகை மரங்கள், காய்கறிகளுக்கான சாகுபடிக்கு மானியம் பெற பிப். 28-க்குள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 02nd February 2019 06:30 AM | Last Updated : 02nd February 2019 06:30 AM | அ+அ அ- |

தை மாதப் பட்டத்தில் பயிரிடப்பட்ட பழவகை மரங்கள், காய்கறிகளுக்கான சாகுபடிக்கு பிந்தைய மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து புதுவை வேளாண் துறை (தோட்டக்கலை)கூடுதல் வேளாண் இயக்குநர் அலுவலகம் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: புதுவை அரசு வேளாண் - விவசாயிகள் நலத் துறையில் கூடுதல் வேளாண் இயக்குநர் (தோட்டக்கலை) அலுவலகம் மூலம் தை மாதப் பட்டத்தில் பயிரிடப்பட்ட பழவகை மரங்கள், வாழை, பூக்கள் மற்றும் காய்கறிகளுக்கான சாகுபடிக்கு பிந்தைய மானியம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் விவசாயிகளிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
இந்த விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட உழவர் உதவியகத்தில் பெறப்பட்டு, நிறைவு செய்து அதே அலுவலகத்தில் பிப். 28-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.