சுடச்சுட

  

  புதுவையில் கட்டாய தலைக்கவச சட்டத்தை அமல்படுத்த திமுகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
  இது குறித்து அந்தக் கட்சியின் புதுவை தெற்கு மாநில அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:
  புதுவையில் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட தினம் தினம் ஒரு அறிவிப்பை துணைநிலை ஆளுநர் வெளியிடுகிறார்.
  தலைக்கவசம் விவகாரத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற முதல்வர் உத்தரவை மீறி காவல்துறை செயல்படுவது மக்களிடத்தில் கேள்வி எழுந்துள்ளது.  
  புதுவை மக்களுக்கு கட்டாய தலைக்கவச சட்டம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  
  இதில் போடப்படும் வழக்குகளுக்கு திமுக வழக்குரைஞர்கள் அணி செயல்படும் என்றார் சிவா எம்.எல்.ஏ.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai