சுடச்சுட

  

  புதுச்சேரி நகராட்சிக்கு உள்பட்ட பகுதி வணிகர்கள், வியாபாரிகள் தொழில் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என புதுச்சேரி நகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
  இதுகுறித்து புதுச்சேரி நகராட்சி ஆணையர் ஆதர்ஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
  புதுச்சேரி நகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள வணிகர்கள், வியாபாரிகள் நிகழாண்டுக்கான தொழில் உரிமத்தை பெறுவது மற்றும் புதுப்பித்தல் செய்வதுடன் மட்டுமல்லாமல் வரும் 2019-20 ஆண்டுக்கான வணிக உரிமத்தை வரும் 28-ஆம் தேதிக்கு முன்னதாக புதுப்பித்து 25 சதவீத காலதாமத கட்டணத்தை தவிர்த்துக் கொள்ளலாம்.
  மேலும், உரிமம் பெறாமல் வணிகம், தொழில் செய்பவர்கள் உரிமம் பெறுவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்து தொழில் உரிமம் பெற்று, தடை நடவடிக்கையை தவிர்க்கும்படி கேட்டுகொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai