சுடச்சுட

  

  புதுச்சேரி முத்தியால்பேட்டையில் 200 பயனாளிகளுக்கு பல்வேறு உதவித்தொகையை அமைச்சர் மு.கந்தசாமி செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
  புதுச்சேரி முத்தியால்பேட்டையில் முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், முதிர்கன்னிகள், திருநங்கைகள் ஆகியோருக்கு அரசு உதவித்தொகை வழங்க தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் தொடர் நடவடிக்கை மேற்கொண்டார். 
  இதன் விளைவாக முத்தியால்பேட்டை தொகுதியில் 200 பேருக்கு உதவித்தொகை வழங்க அரசு ஒப்புதல் அளித்தது.
  புதிய பயனாளிகளுக்கு முதல் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  இதில் வையாபுரிமணிகண்டன் எம்.எல்.ஏ.  தலைமை வகித்தார். சமூகநலத் துறை அமைச்சர் கந்தசாமி பயனாளிகளுக்கு உதவித் தொகையை வழங்கினார். 
  நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குநர் யஷ்வந்தையா,  அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai