மும்பை மாணவிகளுக்கு களிமண் பொம்மை தயாரிப்புப் பயிற்சி
By DIN | Published On : 20th February 2019 08:51 AM | Last Updated : 20th February 2019 08:51 AM | அ+அ அ- |

மும்பை மாணவிகளுக்கு புதுச்சேரியில் களிமண் பொம்மை தயாரிப்பு பயிற்சி நடைபெற்றது.
தமிழர்களின் பாரம்பரிய களிமண் பொம்மை தயாரிப்புத் தொழில் கூடத்தை தேசிய விருதாளர் முனுசாமி புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே கணுவாப்பேட்டை கிராமத்தில் நடத்தி வருகிறார். மும்பையைச் சேர்ந்த சர்வதேச பள்ளி மாணவர்கள் 90 பேர், 7 நாள் கல்வி சுற்றுலாவாக புதுச்சேரி வந்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக, களிமண் கொண்டு பொம்மைகள் தயாரிக்கும் முறையை பார்வையிட்ட அவர்கள், தேசிய விருதாளர் முனுசாமி மாணவ, மாணவிகளுக்கு களிமண் கொண்டு பொமைகளை செய்து காட்டி பயிற்சி அளித்தார். மிகவும் பயனுள்ள இந்தப் பயிற்சி பெற்றதன் மூலம் பாரம்பரிய கலையை கற்க முடிந்ததாகவும் மற்ற மாணவர்களுக்கும் இக்கலை பயிற்சியை சொல்லித் தருவோம் என மாணவி சானியா தெரிவித்தார்.
அழிந்து வரும் பாரம்பரிய களிமண் பொம்மை தயாரிப்புக் கலையை கடந்த 30 ஆண்டுகளாக இன்றைய மாணவர் சமுதாயத்துக்கு கற்றுத் தருவதன் மூலம் இந்த கலை பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக தேசிய விருதாளர் முனுசாமி தெரிவித்தார்.