முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
புதுவை மத்திய தேர்தல் அதிகாரியை மாற்ற திமுக கோரிக்கை
By DIN | Published On : 28th February 2019 08:57 AM | Last Updated : 28th February 2019 08:57 AM | அ+அ அ- |

புதுவை மத்திய தேர்தல் அதிகாரி வி.கந்தவேலுவை மாற்ற வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம் அனுப்பியுள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ. புதன்கிழமை அனுப்பிய கடிதம் விவரம்:
மக்களவைத் தேர்தலை நடத்தக்கூடிய பொறுப்பில் இருக்கும் அரசு அதிகாரிகள் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் இருந்தால், அவர்களை மாற்ற வேண்டும் என்று மத்திய தேர்தல் ஆணையம் அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும்
சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
ஆனால், புதுவையில் நிதித்துறை செயலர் பதவியில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் கந்தவேலு ஒரே இடத்தில் பணியாற்றி வருகிறார்.
மேலும், அவர் தலைமை தேர்தல் அதிகாரியாகவும் உள்ளார். அவரை மாற்றினால் மட்டுமே புதுவையில் நேர்மையான முறையில் தேர்தல் நடக்கும் என்ற நிலை உள்ளது. எனவே, எந்த தாமதமும் இன்றி கந்தவேலுவை இடமாற்றம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் சிவா எம்.எல்.ஏ.