வாய்க்கால் தூர்வாரும் பணி தொடக்கம்
By DIN | Published On : 28th February 2019 08:59 AM | Last Updated : 28th February 2019 08:59 AM | அ+அ அ- |

ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் கிராம ஊராட்சிக்கு உள்பட்ட வாய்க்கால் ஊரக வேலைத் திட்டத்தின் மூலம் ரூ.3 லட்சத்தில் 92 ஆயிரம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.
இதில் சமூக நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி கலந்து கொண்டு தூர்வாரி பணியை தொடக்கிவைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் திருஞானம், அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலர் மலர், உதவிப் பொறியாளர் அமீர்முகம்மது உசைன், இளநிலைப் பொறியாளர் விவேகானந்தம் மற்றும் ஊர்பொதுமக்கள் கலந்துகொண்டனர். 1,725 வேலைநாள்களில் இந்த வாய்க்கால் தூர்வாரப்பட உள்ளது.