புதுவையில் ஜன.8-இல் முழு அடைப்புப் போராட்டம் 

மத்திய அரசைக் கண்டித்து, புதுவையில் வருகிற 8- ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என அனைத்து தொழில்சங்கங்கள் அறிவித்தன.

மத்திய அரசைக் கண்டித்து, புதுவையில் வருகிற 8- ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என அனைத்து தொழில்சங்கங்கள் அறிவித்தன.
இதுகுறித்து புதுச்சேரி அனைத்துத் தொழில்சங்க அமைப்புகள் சார்பில் ஐஎன்டியூசி தலைவர் ஜி. ரவிச்சந்திரன், ஏஐடியூசி பொதுச் செயலர் கே.சேதுசெல்வம் ஆகியோர் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நான்கரை ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த ஆட்சியின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளைக் கண்டித்தும், விலைவாசி உயர்வைக் குறைக்க வலியுறுத்தியும் வருகிற 8, 9 ஆகிய தேதிகளில் பொது வேலைநிறுத்தத்துக்கு இந்திய தொழிலாளர்களின் தேசிய மாநாடு அழைப்பு விடுத்துள்ளது. 
அனைத்துத் தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ. 21 ஆயிரம் குறைந்தபட்ச ஊதியம், 58 வயதான அனைவருக்கும் ரூ. 6 ஆயிரத்துக்கு குறையாத ஓய்வூதியம், ஒப்பந்தத் தொழிலாளர் முறையைக் கைவிடுதல், தொழிலாளர் சட்டங்களை முதலாளிகளுக்குச் சாதகமாக திருத்துவதை நிறுத்துவது, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது, பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இதையொட்டி, புதுவையில் ஜனவரி 8, 9 தேதிகளில் பொதுவேலை நிறுத்தம் நடைபெறும். 
8-ஆம் தேதி முழு கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும். புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 11 இடங்களில் மறியல் நடத்தப்படும். ஆட்டோ, மினி ஆட்டோ, பேருந்துகள் இயங்காது. அரசு, தனியார் நிறுவனங்களும் இயங்காது.
இதையொட்டி, வேலைநிறுத்த கருத்தரங்கமும், ஜன. 4, 5, 7 ஆகிய தேதிகளில் புதுவை மாநிலம் முழுவதும் வாகன பிரசாரமும் மேற்கொள்ளப்படும். 
இந்த வேலைநிறுத்தத்தில் பஞ்சாலைகள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு நிறுவனங்கள், முகமைகள், கூட்டுறவு அமைப்புகள், தனியார் தொழில்சாலைகள் ஆகியவற்றில் பணிபுரியும் அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள், கட்டுமானம், ஆட்டோ, டெம்போ பேருந்து, சுமை தூக்குவோர், கைத்தறி தொழிலாளர் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் என அனைவரும் பங்கேற்கின்றனர் என்றனர் அவர்கள்.
பேட்டியின் போது, எல்பிஎப் மாநிலத் தலைவர் எஸ். அண்ணா அடைக்கலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com