சுடச்சுட

  

  புதுச்சேரி கிரிக்கெட் சங்கம் நடத்தும் தென்மண்டல அளவிலான 16 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான கிரிக்கெட் போட்டி புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
  இந்தப் போட்டியில் தமிழகம், ஆந்திரம், ஹைதராபாத், கர்நாடகம், கேரளம், கோவா, புதுச்சேரி ஆகிய 7 மாநில அணிகள் பங்கேற்றுள்ளன. 
  புதுச்சேரி அருகே துத்திப்பட்டு சீக்கம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொடக்கப்  போட்டியில் ஆந்திரம், கேரள அணிகள் மோதின. இதில் ஆந்திர மாநில அணி வெற்றி பெற்றது.  
  லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி மைதானத்தில் கோவா, ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அக்கார்டு உணவகத்தின் துணைத் தலைவர் வைரக்குமார், போட்டியைத் தொடக்கி வைத்தார். 
  புதுச்சேரி கிரிக்கெட் சங்கத்தின் செயலர் (பொ) சந்திரன், 
  தேர்வுக் குழு உறுப்பினர்கள் அருள்குமார், வெங்கட்ராமன் உள்ளிட்ட  பலர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai