சுடச்சுட

  

  தேசிய பேஸ்பால் போட்டியில் பங்கேற்க புதுவை வீரர்கள் மத்திய பிரதேசம் பயணம்

  By DIN  |   Published on : 12th January 2019 09:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேசிய பேஸ்பால் போட்டியில் பங்கேற்க மத்திய பிரதேசம் செல்லும் புதுவை மாநில வீரர்களை பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம் வழியனுப்பி வைத்தார்.
  தேசிய அளவிலான 33-ஆவது சீனியர் பேஸ்பால்  போட்டி 
  மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் மாவட்டத்தில் ஜன. 12-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
  இந்தப் போட்டியில் புதுவையைச் சேர்ந்த  சீனுவாசப்
  பெருமாள், நிவாஸ், பிரவீன்குமார், தெய்வசிகாமணி, அல் அமத் நவாஸ், சசிதரன், அஜய்ராஜ், அருள், நாகராஜ், மோகன்ராஜ், விக்னேஷ்வரன், முகமது அநாஸ், ஸ்ரீராம் அஜய் லூர்துராஜ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்த அணியின் பயிற்சியாளராக ஆனந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
  புதுவை அணி வீரர்கள், பயிற்சியாளர் ஆகியோர் புதுச்சேரியில் இருந்து மத்திய பிரதேசத்துக்கு புதன்கிழமை புறப்பட்டுச் சென்றனர். புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வீரர்களை பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
  நிகழ்ச்சியில் பேரவைத் தலைவரின்  உதவியாளர் வினோத், 
  பேஸ்பால் சங்கத்தின் புதுவை மாநிலத் தலைவர்  நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai