சுடச்சுட

  

  புதுச்சேரியில் பள்ளி மாணவர் தூக்கிட்டு இறந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
  முதலியார்பேட்டை ஜெயமூர்த்தி ராஜா நகர், இளங்கோ தெருவைச் சேர்ந்த சேகரன் மகன் விஷ்ணு (16). நகரப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நடந்து முடிந்த அரையாண்டுத் தேர்வில் 2 பாடங்களில் மாணவர் விஷ்ணு தோல்வியடைந்த நிலையில், சிறப்பு வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, விஷ்ணு வீட்டில் யாருமில்லாத நேரத்தில் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  இது குறித்து முதலியார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai