சுடச்சுட

    

    பொங்கல் பரிசு தொகுப்புக்கு நிபந்தனை விதிக்க முடிவு செய்தது முதல்வர்தான்: கிரண் பேடி

    By DIN  |   Published on : 12th January 2019 09:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு நிபந்தனை விதிக்க ஒப்புதல் அளித்தது முதல்வர் நாராயணசாமிதான் என்று துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
    புதுவையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு எப்போது வழங்கப்படும் என்பது இதுவரை கேள்விக்குறியாக உள்ளது. இதற்கான கோப்பு 2 முறை ஆளுநருக்கு அனுப்பப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டுவிட்டன.
    ஏழைகள், சிவப்பு அட்டைதாரர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க வேண்டும் என நிபந்தனை விதித்து கோப்பை ஆளுநர் திருப்பி அனுப்பிவிட்டதாக முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து புகார் கூறி வருகிறார். இந்த நிலையில், ஆளுநர் கிரண் பேடி தனது கட்செவி அஞ்சலில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க நிபந்தனை விதிக்க முடிவு செய்தது முதல்வர் நாராயணசாமிதான் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai