சுடச்சுட

  

  சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் போகிப் பண்டிகையைக் கொண்டாட மாசுக் கட்டுப்பாட்டு குழுமம் அறிவுறுத்தியது.
  இதுகுறித்து புதுவை அரசு அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை, புதுவை மாசுக் கட்டுப்பாட்டு குழுமம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
  தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அப்போது
  டயர்கள், நெகிழிக் கழிவுகளை எரிக்கும் பழக்கம் உள்ளது. இதனால, சுற்றுச்சூழலும், காற்றும் மாசடைகிறது. இதன் காரணமாக மனிதர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் சூழல் ஏற்படுகிறது.
  எனவே, பொதுமக்கள் போகிப் பண்டிகையன்று டயர், ரப்பர், நெகிழிப் பொருள்கள், தெர்மாகோல், செயற்கை இழைத்துணி வகைகள் போன்ற பொருள்களை எரிக்காமல், மாசற்ற வகையில் போகியைக் கொண்டாட வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai