சுடச்சுட

  

  உருளையன்பேட்டை தொகுதியில் வீடு கட்டுவதற்காக 32 பயனாளிகளுக்கு ரூ. 15 லட்சத்துக்கான நிதியுதவி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
   புதுவை அரசின் குடிசைமாற்று வாரியம் மூலம் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், 2, 3 -ஆம் கட்டத் தவணைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 
  அதன்படி, உருளையன்பேட்டை தொகுதியைச் சேர்ந்த 32 பயனாளிகளுக்கு ரூ. 15 லட்சத்துக்கான தவணைத் தொகை வழங்கும் நிகழ்ச்சி கல்வே பங்களாவில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் அந்தச் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், பிப்டிக் தலைவருமான இரா.சிவா  கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு வீடு கட்டும் 
  தவணைத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
  நிகழ்ச்சியில் குடிசைமாற்று வாரிய தலைமைச் செயல் அலுவலர் லாரன்ஸ் குணசீலன், இளநிலைப் பொறியாளர் அருள்மொழி, களஆய்வாளர் செல்வராஜ், திமுக பொதுக் குழு உறுப்பினர் மாறன், தொகுதிச் செயலர் சக்திவேல், பொருளாளர் சுப்ரமணி, 
  ஆதிதிராவிட நலக் குழுத் துணை அமைப்பாளர் பிரபாகரன் சாஸ்திரி 
  உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai