தங்கம் வென்ற மாணவருக்கு பாராட்டு

தேசிய அளவிலான ரோலார் ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் வென்ற புதுச்சேரி அமலோற்பவம் பள்ளி மாணவரை அந்தப் பள்ளியின் முதுநிலை முதல்வர் லூர்துசாமி பாராட்டினார்.

தேசிய அளவிலான ரோலார் ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் வென்ற புதுச்சேரி அமலோற்பவம் பள்ளி மாணவரை அந்தப் பள்ளியின் முதுநிலை முதல்வர் லூர்துசாமி பாராட்டினார்.
தேசிய அளவில் பள்ளி மாணவர்களுக்கான 64-ஆம் ஆண்டு விளையாட்டு போட்டிகள், கர்நாடக மாநிலம், பெல்காமில் அண்மையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
நான்கு நாள்கள் நடைபெற்ற போட்டிகளில், புதுச்சேரி அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர் ஈஸ்வர் தங்கம், வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இவர், 14 வயதுக்கு உள்பட்டோர் ஆண்கள் பிரிவில் ரோலார் ஸ்கேட்டிங் போட்டியில் 500 மீட்டர் பிரிவில் தங்க பதக்கமும், ஆயிரம் மீட்டர் ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றார்.
மேலும், ஒற்றையர் ஆடவர் பிரிவில் சாம்பியன் பட்டத்தையும் வென்றார்.  தேசிய அளவில் சாதனை படைத்த மாணவரை பள்ளித் தாளாளர் லுôர்துசாமி சால்வை அணிவித்து பாராட்டினார். மேலும் ஸ்கேட்டிங் உபகரணங்கள் வாங்க, ரூ. 31,500-க்கான 
காசோலையை மாணவருக்கு வழங்கினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com