புகையில்லா போகி: சுகாதாரத் துறை சார்பில் விழிப்புணர்வுப் பேரணி

குயவர்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், புகையில்லா போகி மற்றும் டெங்கு விழிப்புணர்வுப் பேரணி புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குயவர்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், புகையில்லா போகி மற்றும் டெங்கு விழிப்புணர்வுப் பேரணி புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பேரணியை பொது சுகாதாரத் துறை துணை இயக்குநர் ரகுநாதன், தேசிய கொசு - கொசுக்களால் பரவும் நோய் தடுப்புத் திட்டத்தின் மாநிலத் திட்ட அதிகாரி மருத்துவர் சுந்தரராஜன், மலேரியா தடுப்பு உதவி இயக்குநர் கணேசன் ஆகியோர் கொடியசைத்துத் தொடக்கி வைத்தனர். 
 பேரணியில் கஸ்தூரி பாய் செவிலியர் கல்லூரி, ஷைன் பாராமெடிக்கல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தமிழ் பாரம்பரியப்படி உடையணிந்து, புகையில்லா போகிப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என வலியுறுத்தி, விழிப்புணர்வுப் பதாகைகளை கைகளில் ஏந்தியபடி சென்ற
னர்.
அப்போது, அவர்கள் போகிப் பண்டிகை நாளில் பழைய டயர்கள், ரப்பர், நெகிழிப் பொருள்களை எரிப்பதால், நச்சுப் புகை வெளியேறி, மக்களுக்கு சுவாசக் கோளாறுகள், இருமல், நுரையீரல் பிரச்னை, கண், மூக்கு பகுதிகளில் எரிச்சல் உள்பட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. 
எனவே, நெகிழிக் கழிவுகள் உள்ளிட்ட பொருள்களை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என முழக்கமிட்டபடி விழிப்புணர்வை ஏற்படுத்திச் சென்றனர்.
முன்னதாக, சுகாதார உதவி ஆய்வாளர் ஐயனார்  வரவேற்றார். மருத்துவ அலுவலர் அஜ்மல் தலைமை வகித்தார். பொது சுகாதார செவிலிய அதிகாரி கீதா, சுகாதார ஆய்வாளர் யசோதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
நிகழ்ச்சி ஏற்பாடுகளை மருத்துவமனை ஊழியர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com