புதுவை இளைஞர்கள் 2 பேர் தடுப்புக் காவலில் கைது

பெட்ரோல் நிலைய ஊழியரைத் தாக்கி கொள்ளையடித்த சம்பவத்தில் ஈடுபட்டதாக 2 பேரை தடுப்புக் காவலில் காவல் துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.

பெட்ரோல் நிலைய ஊழியரைத் தாக்கி கொள்ளையடித்த சம்பவத்தில் ஈடுபட்டதாக 2 பேரை தடுப்புக் காவலில் காவல் துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், புதுச்சத்திரத்தில் தனியார் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையம் அமைந்துள்ளது. இங்கு கடந்த டிச.26-ஆம் தேதி இரவு ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்கள் தங்களது வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பிக்கொண்டதோடு, விற்பனை நிலையத்தில் பணியிலிருந்த ஊழியர் 
மா.சிவசங்கர் (30) என்பவரை அரிவாளால் வெட்டி, அவரிடமிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த வழக்கில் மாவட்ட எஸ்பி ப.சரவணன் மேற்பார்வையில் தனிப் படை அமைக்கப்பட்டு, புதுவை மாநிலம் முத்தையால்பேட்டை சோலைநகரைச் சேர்ந்தவரும், தற்போது கரிக்கலாம்பாக்கத்தில் வசித்து வருபவருமான அர்ச்சுனன் மகன் சுரேஷ் (27), கரிக்கலாம்பாக்கம் ராஜீவ்காந்தி தெருவைச் சேர்ந்த அழகப்பன் மகன் தேவா(23), குரு என்ற மணிகண்டன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். 
இதில், சுரேஷ் மீது கோட்டகுப்பம் காவல் நிலையத்தில்  கொலை வழக்கு, விழுப்புரம் நகரம், புதுச்சத்திரம், கிள்ளை, சிதம்பரம் தாலுகா காவல் நிலையங்களில் வழிப்பறி வழக்குகளும் செங்கல்பட்டு காவல் நிலையத்தில் கார் கடத்தல் வழக்கு என மொத்தம் 9 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதேபோல, தேவா மீது கரிக்கலாம்பாக்கம் காவல் நிலையம், புதுசத்திரம், கிள்ளை, சிதம்பரம் தாலுகா ஆகிய காவல் நிலையங்களில் மொத்தம் 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 
இவர்களின் குற்றச் செய்கையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு தடுப்புக் காவலில் கைது செய்திட வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் பரிந்துரைத்தார். அதன்பேரில் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் அதற்கான உத்தரவை பிறப்பித்ததை தொடர்ந்து இருவரையும் ஓராண்டுக்கு சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நகல் கடலூர் மத்திய சிறை நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com