சுடச்சுட

  


  திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, வருகிற 16- ஆம் தேதி புதுவையில் மதுக் கடைகளை மூட கலால் துறை 
  உத்தரவிட்டது.இதுகுறித்து புதுவை கலால் துறை துணை ஆணையர் ஜ. தயாளன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
  புதுவை கலால் சட்டம் (ம) விதிகளின் படியும், 4.6.2018- தேதியிட்ட புதுவை மாநில அரசிதழில் கூறப்பட்ட நிபந்தனையின் படியும், புதுவையில் உள்ள அனைத்து கள், சாராயம், மது பார் உள்ளிட்ட அனைத்து வகை மதுக் கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, வருகிற 16-ஆம் தேதி மூடப்பட வேண்டும். அன்றைய தினம் அனைத்து இடங்களிலும் மது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுவோர் மீது புதுவை கலால் சட்டம் 1970-இன்படி, நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai