சுடச்சுட

  

  வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து மோசடி: நகை மதிப்பீட்டாளர் கைது

  By DIN  |   Published on : 13th January 2019 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.1.50 கோடி மோசடி செய்ததாக, நகை மதிப்பீட்டாளரை போலீஸார் கைது செய்தனர்.
  செஞ்சி வட்டம், திருவம்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், பொதுமக்கள் கணக்கு வைத்து, பணப்பரிவர்த்தனை செய்து வருகின்றனர்.
  இந்த வங்கியில் விழுப்புரம், வண்டிமேடு பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் ஜெகந்நாதன் (39), கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிகிறார். இவர், பல்வேறு வாடிக்கையாளர்களின் பெயரில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.1.50 கோடி வரை பணத்தை பெற்று மோசடி செய்தது வங்கி மண்டல அலுவலர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்தது.
  இதுகுறித்து வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில், செஞ்சி போலீஸார் வழக்குப் பதிந்து ஜெகந்நாதனை சனிக்கிழமை
  கைது செய்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai