களிமண் பொம்மை தயாரிக்க பயிற்சி

புதுவை மாநிலம், வில்லியனூரில் பிரபல கைவினை கலைஞர் முனுசாமியிடம், பெங்களூரை சேர்ந்த மாணவிகள்


புதுவை மாநிலம், வில்லியனூரில் பிரபல கைவினை கலைஞர் முனுசாமியிடம், பெங்களூரை சேர்ந்த மாணவிகள் களிமண் பொம்மைகளை தயாரிக்கப் பயிற்சி பெற்றனர்.
தமிழர்களின் பாரம்பரிய களிமண் பொம்மை தயாரிப்பு தொழில் கூடத்தை தேசிய விருதாளர் முனுசாமி வில்லியனூர் அருகே கணுவாய்ப்பேட்டையில் நடத்தி வருகிறார். 
இந்தத் தொழில் கூடத்தைப் பார்வையிட பெங்களூரை சேர்ந்த சர்வதேச பள்ளி மாணவர்கள் 120 பேர், பாரம்பரிய கல்வி சுற்றுலாவாக சனிக்கிழமை புதுவை வந்தனர். களிமண் கொண்டு பொம்மைகளைத் தயாரிக்கும் முறையைப் பார்வையிட்ட அவர்கள், அங்கு பயிற்சியும் பெற்றனர்.
மிகவும் பயனுள்ள இந்தப் பயிற்சி மூலம் பாரம்பரிய கலையைக் கற்க முடிந்ததாகவும், மற்ற மாணவர்களுக்கும் இந்தக் கலைப் பயிற்சியைக் கற்றுத் தருவோம் என்றும் மாணவர்கள் தெரிவித்தனர். மறைந்து வரும் பாரம்பரிய களிமண் பொம்மை தயாரிப்பு குறித்து இன்றைய மாணவர் சமுதாயத்துக்கு கற்றுத் தருவதன் மூலம், இந்தக் கலை பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக தேசிய விருதாளர் முனுசாமி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com