பொங்கல்: பறவைகள் கணக்கெடுப்பு பணி நாளை தொடக்கம்

பொங்கல் பண்டிகையையொட்டி, பறவைகள் கணக்கெடுப்பு பணி திங்கள்கிழமை (ஜன. 14) தொடங்க உள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி, பறவைகள் கணக்கெடுப்பு பணி திங்கள்கிழமை (ஜன. 14) தொடங்க உள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுற்றுச்சூழல் கல்விக் கழகத்தின் பறவை ஆர்வலர்களானசிவ.கணபதி, சுரேந்தர் ஆகியோர் சனிக்கிழமை கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
இந்தியாவில் பறவைகள் குறித்து கணக்கெடுப்பை நடத்தும் ங்க்ஷண்ழ்க் ஐய்க்ண்ஹ-வும், கணக்கெடுப்பை ஒருங்கிணைக்கும் குழுமமான க்ஷண்ழ்க்ஸ்ரீர்ன்ய்ற் ஐய்க்ண்ஹ-வும், தமிழ் பறவை ஆர்வலர்கள்கூட்டமைப்பும் இணைந்து, பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பை தமிழகம் மற்றும் புதுவையில் ஜன. 14-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை நடத்துகின்றன. 
இந்தக் கணக்கெடுப்பு பணி கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதில், பறவைகள் மீது ஆர்வம் கொண்டவர்கள் கலந்து கொள்ளலாம்.
இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்க உங்களை சுற்றியுள்ள ஏரி, குளம், ஆறு, தோட்டம், பள்ளி, கல்லூரி, அலுவலகம், வீட்டு மாடி என எந்தப் பகுதியிலும் தொடர்ச்சியாக, குறைந்தது 15 நிமிடங்களுக்கு என்ன வகையான பறவைகள் வருகின்றன என்று பார்த்து, அடையாளம் கண்டு, அவற்றின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு, பறவை பட்டியலை தயார் செய்து, அந்தப் பட்டியலை ட்ற்ற்ல்://ங்க்ஷண்ழ்க்.ர்ழ்ஞ்/ண்ய்க்ண்ஹ/ என்ற இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.
பொங்கல் விடுமுறை நாள்களில் எத்தனை முடியுமோ அத்தனை பறவைகளின் பட்டியலை உள்ளிடலாம். பறவைகளைப் பார்க்க சிறந்த நேரம் அதிகாலை, மாலை வேளை ஆகும்.
எனினும், உங்களால் எப்போது முடியுமோ அப்போதுகூட பார்த்துப் பட்டியலிடலாம். 
ஸ்மார்ட் செல்லிடபேசி வைத்திருப்பவர்கள் ஷங்க்ஷண்ழ்க் என்ற செயலி மூலம் பறவை பட்டியலைப் பதிவேற்றலாம். 
கடந்தாண்டு தமிழகம், புதுவையில் பொங்கல் நாள்களில் 1,734 பறவைகளின் பட்டியல், 196 பறவை ஆர்வலர்களால், ங்க்ஷண்ழ்க் ண்ய்க்ண்ஹ இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டன.
இந்த நாள்களில் மொத்தம் 350 வகையான பறவைகள் பதிவு செய்யப்பட்டன. 
அதிகமாகப் பதிவு செய்யப்பட்ட பறவைகளில் முதல் 10 இடங்களில் மைனா, காகம், கரிச்சான், பச்சைக் கிளி, மடையான், அண்டங்காக்கை, சின்னான், தவிட்டுக் குருவி, மணிப்புறா, பனை உழவாரன் ஆகியன இடம் பெற்றன. 
மேலும், சுற்றுச்சூழல் கல்விக் கழகம் மூலம் புதுச்சேரி, விழுப்புரத்தில் உள்ள 28 ஏரிகளில் பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு 141 வகை பறவைகள் பதிவு செய்யப்பட்டன. குறிப்பாக,  இணையதளத்தில் நாம் பார்த்த பறவை பட்டியலை எப்படி உள்ளிடுவது, பறவைகளைப் பார்த்தலின் நெறிமுறைகள், பறவைகளை அடையாளம் காண சில தமிழக பறவைகளின் தமிழ்ப் பெயர்களுடன் கூடிய படங்கள் முதலிய காட்சியளிப்புகளும், விளக்கவுரைகளும்  காணலாம். 
பொங்கல் நாள்களில் பறவைகளைக் கணக்கிட்டு, சுற்றுச்சூழலைக் காக்கப் பாடுபடுவோம் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com