திருவள்ளுவர் சிலைக்கு அமைச்சர் மரியாதை

திருவள்ளுவர் தினத்தையொட்டி, புதுச்சேரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு புதுவை அரசு சார்பில் புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

திருவள்ளுவர் தினத்தையொட்டி, புதுச்சேரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு புதுவை அரசு சார்பில் புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
புதுவை அரசின் செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள  திருவள்ளுவர் சிலைக்கு சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல, நோணாங்குப்பம் படகு குழாம் எதிரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு பல்வேறு தமிழ் அமைப்பினர்,  தமிழறிஞர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்கினர்.  
திமுக: உருளையன்பேட்டை தொகுதி திமுக சார்பில்,  புத்தாண்டு, பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் ஆகிய முப்பெரும் விழா, லப்போர்த் வீதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ. தலைமை வகித்து,  திருவள்ளுவர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மதிமுக: புதுச்சேரியில் உள்ள திருவள்ளுவர் உருவச் சிலைக்கு புதுவை மாநில மதிமுக பொறுப்புக்குழுத் தலைவர் அ.கபிரியேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  
பாஜக: புதுவை பாஜக மாநில துணைத் தலைவர் ஆர்.செல்வம் தலைமையிலான நிர்வாகிகள்,  நோணாங்குப்பத்தில் உள்ள திருவள்ளுவர்  உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com