தேசிய ராணுவக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

தேசிய ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பில் சேர மார்ச் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பில் சேர மார்ச் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து புதுவை அரசின் பள்ளிக் கல்வி இயக்குநர் ருத்ர கெளடு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 உத்தரகண்ட் மாநிலம்,  டெராடூனில் அமைந்துள்ள இந்திய தேசிய ராணுவக் கல்லூரியில், எட்டாம் வகுப்பில் சேருவதற்கு ஆண்கள் மட்டும் வருகிற மார்ச் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.  1.1.2020 அன்று பதினொன்றரை வயது குறையாமலும், 13 வயது பூர்த்தியாகாமலும் இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பித்தோருக்கு வருகிற ஜூன் 1-ஆம் தேதி காலை 10 முதல் 12 மணி வரை ஆங்கிலத் தேர்வும்,  பிற்பகல் 2 முதல் 3.30 மணி வரை கணிதத் தேர்வும் நடைபெறும். ஜூன் 2-ஆம் தேதி காலை 10 முதல் 11 மணி வரை பொது அறிவுத் தேர்வு நடைபெறும். கணிதம் மற்றும் பொது அறிவுத்தேர்வுகளை ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் எழுதலாம்.  எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு,  நேர்முகத் தேர்வு ஜூன் 4-ஆம் தேதி நடைபெறும்.
  நேர்முகத் தேர்வுக்குப் பிறகு தேர்வு செய்யப்படும் மாணவர்கள், ராணுவ மருத்துவமனைகளில் மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்படுவர்.  புதுவை மாணவர்களுக்கு,  புதுச்சேரியில், மேற்கூறிய தேதிகளில் எழுத்துத் தேர்வு நடக்கும்.  தேர்வு மையம் குறித்த தகவல்,  பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அலுவலக தேர்வுப்பிரிவில், 
அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பப் படிவத்தை பதிவு அஞ்சல் அல்லது விரைவு 
அஞ்சல் மூலம் பெற  அஞ்சல் குறியீட்டு எண் உள்ள விலாசம் மற்றும் தொடர்பு எண் ஆகியவற்றுடன் கூடிய கோரிக்கை மனுவுடன், T​HE CO​M​M​A​N​D​A​NT, RA​S​H​T​R​I​YA IN​D​I​AN MI​L​I​T​A​RY CO​L​L​E​GE, DE​H​R​A​D​UN, DR​A​W​EE BR​A​N​CH, ST​A​TE BA​NK OF IN​D​IA, TEL HA​A​V​AN, DE​H​R​A​D​UN, (BA​NK CO​DE 01576), UT​T​A​R​K​H​A​ND  கிளையில் மாற்றத்தக்க வகையில் கேட்பு வரைவோலை அனுப்ப வேண்டும். 
 பொதுப்பிரிவினர் ரூ.600-க்கும் (விரைவு அஞ்சல்), அட்டவணை இனத்தவர் மற்றும் பழங்குடியினர் அதற்குண்டான சாதி சான்றிதழுடன் ரூ.555 (விரைவு அஞ்சல்) தொகைக்கு கேட்பு வரைவோலையாகவோ  (Ac​c‌o‌u‌n‌t ‌pa‌y‌e‌e Ba‌n‌k D‌e‌m​a‌n‌d D‌r​a‌f‌t) அல்லது  w‌w‌w.‌r‌i‌m​c.‌g‌o‌v.‌i‌n என்ற வலைதளத்திலிருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்யப்பட்ட செலுத்துச்சீட்டு 
(C‌h​a‌l‌l​a‌n) மூலமாகவோ T​HE CO​M​M​A​N​D​A​NT, RA​S​H​T​R​I​YA IN​D​I​AN MI​L​I​T​A​RY CO​L​L​E​GE, DE​H​R​A​D​UN CA​N​T​O​N​M​E​NT, UT​T​A​R​K​H​A​ND 248 003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், இணை இயக்குநர், இரண்டாம் தளம், அ-அடுக்கம்,  காமராஜர் நூற்றாண்டு கல்வி வளாகம், அண்ணா நகர், புதுச்சேரி- 605 005 என்ற முகவரிக்கு, மார்ச் 31-ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் ருத்ரகெளடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com