புதுச்சேரியில் மாட்டுப் பொங்கல் உற்சாகக் கொண்டாட்டம் 

புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து, புதன்கிழமை மாட்டுப் பொங்கல்

புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து, புதன்கிழமை மாட்டுப் பொங்கல் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. வீடுகளில் மாடுகளை விவசாயிகள் அலங்கரித்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.
புதுச்சேரியில் பொங்கல் பண்டிகை செவ்வாய்க்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் வீடுகளில் முன் வண்ண கோலமிட்டு, புதுப் பானைகளில் பொங்கலிட்டு சூரியனுக்கு படையல் வைத்து வழிபட்டனர். பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
பொங்கலுக்கு மறுநாளான புதன்கிழமை மாட்டுப்பொங்கல் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. விவசாயிகள் தங்கள் வீடுகளில் உள்ள மாடுகளை குளிப்பாட்டி,  கொம்புகளுக்கு வண்ணம் பூசி, பலூன் கட்டி, மலர்களால் அலங்கரித்து, பொங்கலிட்டு கற்பூரம் காட்டி வழிபட்டனர். 
பின்னர் டிராக்டர்கள்,  மினி லாரிகளில் மாடுகளை ஏற்றி ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
திருக்கனூர் பல்வேறு பகுதிகளில் அலங்கரித்த மாடுகளை கோயில்களுக்கு கொண்டு சென்று சிறப்பு பூஜைகள் செய்து மஞ்சு விரட்டு நடைபெற்றது.   கிராமப்பகுதிகளில் வாழை, கரும்பு போன்றவைகளைக் கொண்டு மாட்டு வண்டிகள் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் மாட்டு வண்டிகள் அணிவகுத்து சென்றன.  இந்த வண்டிகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏறி உற்சாகமாகச் சென்றனர்.  அப்போது அவர்கள் "பொங்கலோ பொங்கல், மாட்டுப் பொங்கல்" என்று மகிழ்ச்சியுடன் குரலெழுப்பியபடி சென்றனர்.
முன்னதாக, மாட்டு பொங்கலையொட்டி புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாடுகளுக்கான 
சலங்கை, கயிறு, ரிப்பன், பலூன் உள்ளிட்டவற்றை விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com