வாய்க்காலை தூர்வார நிதி வழங்கிய நிறுவனத்துக்கு விருது: ஆளுநர் வழங்கினார்

புதுச்சேரியில் வாய்க்காலை தூர்வார நிதி வழங்கிய தனியார் நிறுவனத்துக்கு "தூய்மை சேவை' விருதை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி வழங்கினார்.

புதுச்சேரியில் வாய்க்காலை தூர்வார நிதி வழங்கிய தனியார் நிறுவனத்துக்கு "தூய்மை சேவை' விருதை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி வழங்கினார்.
 "நீர்வளமிக்க புதுச்சேரி' என்பதை இலக்காக வைத்து தனியார் நிறுவனங்களில் நிதியைப் பெற்று கால்வாய்களை தூர்வாரும் பணிகளில் ஆளுநர் கிரண் பேடி ஈடுபட்டு வருகிறார்.  
அந்தத் திட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட ஏபி ஐஎன்பிஇவி குழுமத்தின் சிகா பிரிவரீஸ் நிறுவனத்துக்கு "தூய்மை சேவை' விருதை புதுவை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர்  கிரண் பேடி அண்மையில் வழங்கி பாராட்டினார்.  இந்த விருதை இந்த நிறுவன நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்.
மது உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வரும் சிகா பிரிவரீஸ் நிறுவனம், தனது செயல்பாட்டின் ஒரு பகுதியாக ஆலைக்கு 
அருகில் உள்ள மேட்டுவாய்க்காலை 2 கி. மீ. தூரத்துக்கு தூர்வாரி தூய்மைப்படுத்தியது. இதன் காரணமாக தண்ணீர் தடைபடும் நிலை தவிர்க்கப்பட்டு, பருவ காலங்களில் பெய்யும் மழை தண்ணீர் நீர்பாசன வாய்க்கால்களிலும் நீர் நிலைகளிலும்  சேமிக்கப்படும்.
ஆளுநர் கிரண் பேடியால் கொண்டுவரப்பட்ட "நீர்வளமிக்க புதுச்சேரி' திட்டம் மூலம் இதுவரை 23 நீர்ப்பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு,  தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன.  பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com