பேரவை துணைத் தலைவரின் காரும் உடைப்பு

புதுச்சேரியில் சட்டப்பேரவை துணைத் தலைவர் வி.பி.சிவகொழுந்துவின் கார் கண்ணாடியும் வியாழக்கிழமை இரவு உடைக்கப்பட்டது.  

புதுச்சேரியில் சட்டப்பேரவை துணைத் தலைவர் வி.பி.சிவகொழுந்துவின் கார் கண்ணாடியும் வியாழக்கிழமை இரவு உடைக்கப்பட்டது.  

புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதி எம்எல்ஏவும், சட்டப்பேரவை துணைத் தலைவருமான வி.பி.சிவகொழுந்து வியாழக்கிழமை இரவு லாஸ்பேட்டை ஆனந்தா நகரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றார். அவரது, காரை விழா நடைபெற்ற இடத்தின் அருகில் ஓட்டுநர் நிறுத்தி வைத்திருந்தார். விழா நிறைவடைந்த பிறகு, சட்டப்பேரவை துணைத் தலைவர் புறப்படுவதற்காக காரின் அருகில் வந்தார். அப்போது, அவரது காரின் பின்பக்கக் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 
பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள் சட்டப்பேரவை துணைத் தலைவரின் கார் கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து லாஸ்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  போலீஸார் விரைந்து வந்து காரை பார்வையிட்டு விசாரணை  நடத்தினர். பின்னர், சட்டப்பேரவை துணைத் தலைவர் வேறு காரில் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டார்.  சீனியர் எஸ்பி அபூர்வா குப்தாவும் நிகழ்விடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com